மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் நவாஸ்

Report Print Steephen Steephen in சமூகம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதியரசர் நவாஸ், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதில் தலைவராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேல் நீதிமன்ற தலைவராக பதவி வகித்த யசந்த கோதாகொட உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனம் செய்யப்பட்டமையை அடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிலைக்கு வெற்றிடம் நிலவுகிறது.

இந்த பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் வரை நவாஸ் பதில் தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

Latest Offers