மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள 13 நாடுகளின் குப்பைகள்

Report Print Ajith Ajith in சமூகம்

தமது நாட்டு துறைமுகத்துக்கு கடந்த வருட பிற்பகுதியில் இருந்து இலங்கை உட்பட்ட 13 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 150 கழிவு பிளாஸ்டிக் கொள்கலன்களை மலேசியா அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

தமது நாட்டை உலக நாடுகள் குப்பை கொட்டும் இடமாக நினைக்க கூடாது என மலேசிய சுற்றாடல் அமைச்சர் யோ பி இன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 110 கொள்கலன்கள் இந்த வருட இறுதியில் திருப்பி அனுப்பப்பவுள்ளதாக மலேசிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மலேசியாவில் இயங்கும் சுமார் 200 சட்டவிரோத கழிவு மீள் சுழற்ச்சி தொழிற்சலைகளை மூடி விட போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers