ரஞ்சனின் குரல் பதிவு விவகாரம்! முன்னாள் நீதிபதி பத்மினியிடம் 3 மணி நேர விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க சுமார் 3 மணி நேர விசாரணையின் பின் இன்று மாலை கொழும்பு குற்ற தடுப்பு பிரிவில் இருந்து வெளியேறினார்.

ரஞ்சன் ராமநாயகவுடன் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் இதன்போது பெறப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலிப்பிட்டியவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டது.

சட்டமா அதிபரின் பணிப்புரையில் முன்னதாகவே காலி பத்தேகம நீதிவான் தம்மிக்க ஹேமபான பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Latest Offers