யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வாகனம் விபத்து: ஒருவர் வைத்தியசாலையில்

Report Print Ashik in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு கழிவு மீன்களை ஏற்றி வந்த கூலர் வாகனம் இன்று அதிகாலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து மன்னார் பிரதான பாலத்தில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

காயமடைந்த வாகன சாரதி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...