வகுப்பறை கூரை திடீரென இடிந்து விழுந்ததில் எட்டு மாணவர்கள் படுகாயம்

Report Print Banu in சமூகம்

அம்பலாங்கொடயில் வகுப்பு நிலையத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வகுப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பலங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.