யாழில் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் எதிர்ப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - அரியாலை, நெளுக்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 ஏக்கர் காணிகளை அரச காணியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நில அளவைகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஒன்று திரண்ட மக்கள் குறித்த காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் யாழ். மாநகர பிரதி முதல்வர் ஈசன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும், பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு யாழ். பிரதேச செயலாளர் சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...