மத்தள விமான நிலைய சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்!!

Report Print Kanmani in சமூகம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மாத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்குவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...