கந்தளாய் பகுதியில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு கடூழிய சிறைதண்டனை

Report Print Mubarak in சமூகம்
29Shares

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய நபருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது முன்னிலையில் இன்று குறித்தநபரை ஆஜர்படுத்தியபோதே ஆறு மாதம் கட்டாய கடூழிய சிறைதண்டனை விதித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

வான் எல, ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் கந்தளாயில் வீடொன்றினுள் புகுந்து வீட்டின் பெறுமதியான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடியதாக பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் சந்தேகநபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டு நீதிவான் இன்றையதினம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.