அம்பாறை மாவட்டத்தில் பொலிஸாரால் திடீர் சோதனைகள் தீவிரம்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகர் பகுதி, கல்முனை நகர் பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு, தண்டப்பணம் விதிக்கப்பட்டு, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

இந் நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன், இதன்போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை, சம்மாந்துறை, சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...