இலங்கையின் பிரபல சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in சமூகம்

இலங்கையின் பிரபல சிரேஷ்ட வானொலி ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கொழும்பில் வைத்து நேற்று காலமானார்.

பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் இலங்கை வானொலியை விட்டு விலகிச்சென்ற பின்னர், அந்த இடத்தை இலங்கை வானொலியில் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பிடித்துக் கொண்டார்.

தனது குரல் வசீகரத்தால் இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் நேயர்களை கொள்ளை கொண்டு தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை இவர் பெற்றிருந்தார்.

30 ஆண்டு கால வானொலி சேவையில் பல இளம் அறிவிப்பாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

இவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, கல்முனை சாய்ந்தருதுவில் உள்ள இவரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்தவகையில், இன்று மாலை அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.