வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயம்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஹொறவப்பொத்தான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா - ஹொறவப்பொத்தான வீதியில் யாழிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த சுற்றுலா சொகுசு பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கமாக சென்ற முச்சக்கரவண்டியொன்றினை மோதி தள்ளியதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மயிலங்குளத்தை சேர்ந்த 40 வயதுடைய நிஹால் ஜெயசிங்க என்பவரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் மடுகந்தை பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers