போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பதின்மூன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் புல்மோட்டை - 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 77 வயதுடைய முகம்மது ஜமால்தீன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சந்தேகநபரை விசாரணை செய்த போது, அவரிடமிருந்து ஐயாயிரம் ரூபாய் பதின்மூன்று நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...