வவுனியா - பம்பைமடுவில் பாரிய தீ பரவல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பம்பைமடு, காட்டுப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று மாலை அடையாளந்தெரியாத நபர்களால் பம்பைமடு குப்பை கொட்டும் பகுதிக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றுள்ள நிலையில், காட்டுப் பகுதியை நோக்கி இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...