சம்மாந்துறையில் காணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

Report Print Varunan in சமூகம்

சம்மாந்துறை, மலையடிவாரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து புதைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய இன்று மாலை விசேடஅதிரடிப்படையினர் குறித்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

உர பையினுள் சுற்றப்பட்டிருந்த நிலையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி, இயங்கு நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்ட துப்பாக்கியுடன் இரு ரவைக் கூடுகளும் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

Latest Offers

loading...