உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்!

Report Print Murali Murali in சமூகம்

குருநாகல் மாவட்டம் தொடங்கஸ்லந்த – கஹாட்டகஹ பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களால் உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கபட்டுள்ளது.

குறித்த சுரங்கத்தில் பணியாற்றும் 60 தொழிலாளர்களே இன்று மாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 15 பெண் தொழிலாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1100 அடி ஆழத்தில் குறித்த தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பதால் உடனடி சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...