சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்! நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள சி.ஐ.டி

Report Print Ajith Ajith in சமூகம்

சுவிஸ் தூதரக பணியாளரின் கடத்தல் விவகாரத்தில் தொடர்புபட்ட பலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் காணியர் பெரிஸ்டெர் பிரான்சிஸ் கடத்தல் தொடர்பில் சி.ஐ.டி இன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, லேக் ஹவுஸ் முன்னாள் தலைவர் கிரிஷாந்த குரே உட்பட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக சி.ஐ.டி நேற்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தொலைபேசி பதிவுகளின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டதாக சி.ஐ.டி தெரிவித்ததுள்ளது.

குறித்த பணியாளர் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடனும் தொலைபேசி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த நவம்பர் 23இல் நாட்டில் இருந்து தப்பி சென்ற சி.ஐ.டி அலுவலர் நிஷாந்த டி சில்வாவுடன், ஷானி அபேசேகரவும் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும் சி.ஐ.டி இனர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Latest Offers