ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்: வடமாகாண ஆளுநர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

பாடசாலை மற்றும் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மற்றும் வைத்தியசாலையின் குறைபாடு ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஜனாதிபதியுடன் உரையாடியிருந்தோம்.

இவற்றுக்குரிய தீர்வுகளை உடனடியாக பெற்றுத் தருவதாக அவர் எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். எனவே இந்த இரு பிரச்சினைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.

இந்தப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக கஸ்டப்படும் வறுமையான மக்கள் பற்றியும் நான் அறிந்திருக்கின்றேன். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களைப் பற்றி அறிந்திருக்கின்றேன்.

நல்ல குடிநீர் வசதி இல்லை என்பது தெரியும். உங்களில் பலருக்கு வீட்டு வசதி, மலசலகூட வசதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியும்.

எனவே இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும். நிச்சயமாக உங்களோடு ஒருவராகவும், உங்களது பணிகளில் ஒருவராகவும் நான் இருப்பேன்.

இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் நீதியான சேவை தொடரும்.

அரசியல் காரணங்களுக்காவோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அநீதிகள் இழைக்கப்படுவதை தடுப்பேன்.

உங்களுக்கான தேவைகளை மாகாண நிர்வாகத்தின் ஊடாக ஏற்படுத்தி தருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers