நாளொன்றுக்கு பல போலி காணி உறுதிப் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றமை கண்டுபிடிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட போலி காணி உறுதிப்பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக பதிவாளர் நாயகம் நாயகம் சதுர விதானகே தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் மற்றும் நொதாரீசுகளினால் ஆவணங்கள் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் மட்டுமே பதிவாளர் திணைக்களத்தினால் பதிவு செய்யப்படுகின்றது.

காணிகளின் உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதிமன்றிலேயே தீர்வு காணப்பட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலி சட்டத்தரணிகள், நொத்தாரீசுகள் மற்றும் பதிவாளர் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோரின் செயற்பாடுகளே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

காணி உறுதிகள் போலியாக பதிவு செய்யப்படுவதனை தடுக்க தற்போதைய காணிப் பதிவு சட்டத்தில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு சில காலம் தேவைப்படும் எனவும் பெப்ரவரி மாதத்தில் ஹோமாகம பிரதேசத்தில் இந்த புதிய நடைமுறை பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காணிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...