இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்களின் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவாதக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் யாழ்ப்பாண மாநகர சபை முன்றலில் நேற்றைய தினம் முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் ஆரம்பித்த புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தமக்கு சாதகமான முடிவு எதுவும் வரவில்லை என்பதை தெரிவித்து இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் எந்த அதிகாரியோ, முதல்வரோ, மாநகர சபை உறுப்பினர்களோ தங்களுடன் வந்து உரையாடவில்லை எனவும் தமக்குரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறித்த போராட்டத்திற்கு இன்றைய தினம் தீர்வு வராவிடின் நாளையதினம் மாநகரசபையை முடக்க உள்ளதாகவும் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...