ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வட பகுதியிலிருந்து அழிக்கப்பட்ட ஆபத்தான வெடிப்பொருட்கள்!

Report Print Yathu in சமூகம்

வடபகுதியில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 969,670 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் 21,173 ஆபத்தான வெடிப்பொருட்களை அகற்றி அழித்துள்ளதாக அந்நடவடிக்கை முகாமையாளர் ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பவை தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் சொந்தப் பகுதிகளில் மீள்க்குடியமர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாக விளங்கியது நிலக்கீழ் புதைக்கப்பட்டிருந்த ஆபத்தான வெடிபொருட்கள் ஆகும்.

இந்த வெடிப்பொருட்களை அகற்றி மக்களை சொந்த நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு பல சர்வதேச மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களும், பல உள்ளூர் மனிதநேயக் கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களும் தங்களுடைய மனிதநேயப் பணிகளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொண்டு மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக பல வாழ்விடங்களை மக்களிடம் கையளித்துள்ளனர்.

இவ்வாறு மனித நேயப்பணியை மேற்கொண்டு வரும் உள்ளூர் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் நிறுவனம் வடபகுதியில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 969,670 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் 21,173 ஆபத்தான வெடிப்பொருட்களை அகற்றி அழித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை மற்றும் கிளாளி போன்ற பகுதிகளில் தங்களுடைய ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக குறித்த பகுதிகளை அண்மித்த கிராமங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை கொண்டு இந்த மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும் மனித கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக துரித கதியில் முகாமாலை மற்றும் கிளாளி பகுதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...