சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மன்னாரில் கருத்தமர்வு

Report Print Ashik in சமூகம்

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பில் மன்னாரில் விழிர்ப்புணர்வு கருத்தமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் நேற்று இந்த கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர் ஏ.நிக்ஸன் கருத்துரைகளை வழங்கியிருந்தார். ஊடகங்கள் ரீதியாக வெளிவருகின்ற செய்திகள் தொடர்பாகவும், அதனால் ஏற்படுகின்ற சாதக, பாதக நிலைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மதங்களுக்கிடையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், மற்றும் கிராம மட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...