கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறுவன் உட்பட மூவர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக முயற்சித்த போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர்களாகும். இவர்களுடன் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து தங்க நகையை பெற்றுக் கொண்டு வெளியேற தயாராகும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவனின் கையில் இருந்த பையில் 5 கிலோ 500 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.