தொலைத்தொடர்பு திணைக்களத்தின் புதிய தலைவராக ரோஹன் பெர்னாண்டோ நியமனம்

Report Print Banu in சமூகம்

மூத்த தேயிலை ஏற்றுமதியாளர் ரோஹன் பெர்னாண்டோ இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹன் பெர்னாண்டோ தேயிலை ஏற்றுமதித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர், கடந்த பல ஆண்டுகளாக பல புதுமையான வகைகளில் தேயிலை பாரம்பரியத்தை வளர்ப்பது, ஊக்குவிப்பது மற்றும் விற்பனை செய்வதில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

ஹெலடிவ் என்ற தனது சொந்த நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு, அவர் கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தேசிய ஏற்றுமதியாளர்கள் குழுவின் தலைவராக செயல்பட்டுள்ளார்.

இவர் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், இலங்கை தேயிலை வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், சபை உறுப்பினராகவும், நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...