தேசிய மட்ட விசேட கல்வி, விளையாட்டுப்போட்டி சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கி.கமலராஜன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
2019ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் வெற்றிப் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் ஊர்வலம் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழர் கலாசார விழுமியங்களை எடுத்தியம்பும் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.
சாதனையாளர்களும், விருந்தினர்களும் அழைத்து வரப்பட்டதை அடுத்து கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தின் இராசநாயகம் அரங்கில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய மட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.