முல்லைத்தீவில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டில் சிறந்த விவசாய, பழமர, பண்ணை உற்பத்திகளில் வினைத்திறனாக செயற்பட்டு சிறந்த இடங்களைப் பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சதாசிவம் கனகரத்தினம், யாழ்.பல்கலை கழக விலங்கு விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னையா, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் பண்ணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...