உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிடம் அறவிடப்பட்ட வரி அறவீடு சட்டத்திற்கு அமைவானதே!

Report Print Suman Suman in சமூகம்
172Shares

கிளிநொச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிடம் அறவிடப்பட்ட வரி அறவீடு சட்டத்திற்கு அமைவானதே என விலை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபரின் சொத்து மதிப்பு தொடர்பில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து, கரைச்சி பிரதேச சபையினால் விலை மதிப்பீட்டு திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதிலளிக்கும் வகையிலேயே விலை மதிப்பீட்டு திணைக்களம் கரைச்சி பிரதேச சபைக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.

அக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பின்வரும் விடயங்களை பரிந்துரை செய்கின்றேன். அயலிலுள்ள கட்டிடங்களிற்கு விதிக்கப்ட்ட அதே அளவீட்டு நடைமுறையே மேற்குறிப்பிட்ட நபரின் ஆதனங்களின் வரி மதிப்பட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை அயலில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்கவில்லை.

தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்தின் வரி மதிப்பீடானது குறிப்பிட்ட நபரிற்கும், அந்நிறுவனத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்திடம் இருந்தே அறவிடப்பட வேண்டும்.

வருட 10 % அறவீடானது பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டு அறவிடப்படுகின்றது. குறித்தநபரிடமிருந்து பெறப்படும் வரிப்பணமான ரூபாய் 76 902 . 40 ம் ஆனது, 10 ஆதனங்களை மேற்குறித்த வரிப் பெறுமதியானது உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் போது மேற்குறித்த ஆதனங்களுக்கான மதிப்பீடானது சாதாரண முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே பெறுமதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை தங்களுக்கு மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.