யாழில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இராணுவத்தினர் - வீடொன்றில் தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Report Print Malar in சமூகம்

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரியவருகின்றது.

வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் உள்ள வீட்டொன்றையே இன்று பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின்பேரில் தேடப்படும் முக்கிய இளைஞர் உள்ளிட்ட 6 பேர் அங்கு தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்தே குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இளைஞன் ஒருவரையும் இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லை.

Latest Offers

loading...