சம்மாந்துறையில் வெடிப்பொருட்கள் மீட்பு - ஒருவர் கைது

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டில் நேற்று மாலை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள், கலிபர் ரக துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள், 5.5 எம்.எம். ரவைகள், 52, 7.5 எம்.எம். ரவைகள் 12, வெடிமருந்து 600 கிராம், ஈய பந்து, துண்டுகள் ஒரு கிலோ, 40 கிராம் கழற்றிய டெட்னேட்டர் பகுதிகள் மற்றும் 03 கட்டுத்துவக்கு குழாய் 01 என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவ்வீட்டின் உரிமையாளரான குறித்தநபர் சந்தேகத்தின் பேரில் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகம்மது இப்பராஹிம் முகம்மது இர்ஹான் எனத் தெரியவருகின்றது.

இவரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...