தோட்டத் தொழிலாளர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Thirumal Thirumal in சமூகம்
60Shares

தலவாக்கலை, வட்டகொடை தோட்டப் பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 30 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த 30 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 13 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.