திம்புள்ள தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Report Print Thirumal Thirumal in சமூகம்

திம்புள்ள தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நான்கு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெலிவத்தை தோட்டத்திலிருந்து திம்புள்ள தோட்டத்திற்கு வந்து தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு இவர்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபரை, உடனடியாக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, மேலும் நான்கு தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (வயது – 56) என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...