நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், முல்லைத்தீவு - கொக்கிளாய், வில்லுக்குளம் பகுதியில் வைத்து உருகுலைந்த நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாஎல பகுதியை சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என்பவர் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers