முல்லைத்தீவு வைத்தியசாலையில் நாளை முதல் 24 மணிநேர சேவை

Report Print Theesan in சமூகம்
216Shares

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் 24 மணி நேர சேவையை நாளை முதல் மெற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தனின் அழைப்பின் பெயரில் இன்றையதினம் விசேட கலநதுரையாடலொன்று இடம்பெற்றது.

முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணிக்கும் அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மதியம் 12.00 முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மகாநாட்டு மண்டபத்திலும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இரண்டு கட்டமாக நடைபெற்ற கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தற்காலிகமாக திங்கள் தொடக்கம் வெள்ளிவரை காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரை வைத்தியர்கள் பணிபுரிவார்கள் என்றும் இரவு நேரம் மற்றும் சனி, ஞாயிறு தினத்தில் வைத்தியர்கள் பணிபுரிய முடியாத நிலைகள் மற்றும் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தெரிவித்தார்.

மக்கள் சார்பாக வைத்தியசாலையின் 24 மணிநேர சேவையில் வைத்தியர் தேவை, வைத்தியர் நிரோசினி அவர்களை நியமித்தல், அபிவிருத்தி குழு ஒன்றை நியமித்தல் தொடர்பாக வாத மற்றும் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, நாளை காலையில் இருந்து வைத்தியர் நிரோசினி அவர்கள் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வைத்தியர் நிரோசினி கூட்டம் நடைபெறும் வேளையில் திடீர் என அவசர தேவையுடைய நோயாளியுடன் யாழ்ப்பாணம் சென்றமையால் இறுதி வரை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

மேற்படி வைத்தியசாலையின் தேவைகளை அபிவிருத்திகளை, அபிவிருத்தி குழுவொன்றை அமைத்து இணைந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கஜன் மற்றும் வைத்தியர் நிரோசினியும், அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியத்தின்

தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனிபிள்ளை, முல்லைத்தீவு வர்த்தக சங்கத்தின் செயலாளர் முத்துராசா கரன், மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.