ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Report Print Ajith Ajith in சமூகம்
219Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று நுகேகொட நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் இன்று ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அவரை இன்று முன்னிலைப்படுத்தாது பகுப்பாய்வு திணைக்களத்தில் மற்றும் ஒரு தினத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதேவேளை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் கசிந்துள்ள குரல் பதிவுகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவு இறுவட்டுக்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 14ம் திகதி மாதிவல இல்லத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

நீதிபதிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.