அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Report Print Ajith Ajith in சமூகம்
430Shares

இலங்கையின் உள்ளகப் பிரச்சனையில் அமெரிக்காவும், சீனாவும் தலையிடுவதாக கூறி அதற்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டத்தை பல்கலைக்கழகங்களின் பிக்கு சம்மேளன உறுப்பினர்கள் நடத்தினர்.

இதில் பங்கேற்ற பிக்குகள் அமெரிக்காவுடனான எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இரத்துச்செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் எதிராக ஒரே குரலில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கைகளுக்கு எதிராக பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேநேரம் சீனாவும் நிதியளிப்பின் மூலம் இலங்கையில் ஆதிக்கத்தை செலுத்துகிறது என்று அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தைய நாடுகளும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.