துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 52 பேர் தாயகம் திரும்பினர்!

Report Print Murali Murali in சமூகம்

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்கள் 52 பேர் இன்றைய தினம் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

குவைத்திலிருந்து ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூ.எல் 230 விமானத்தின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இது தொடர்பில் தமது முறைப்பாடுகளை செய்து விட்டு, வீடு திரும்பியுள்ளனர்.