அசாத் சாலியிடம் பல மணி நேரம் விசாரணை!

Report Print Murali Murali in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்போவது குறித்து தனக்கு கிடைத்த தகவலை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கூறியபோது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக அவர் ஆஜராகி சாட்சியமளித்தார். இந்த சாட்சியத்திலேயே அசாத் சாலி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2015ம் ஆண்டில் ஒரு குடும்பமே அல்குவைதா அமைப்புடன் சேர்ந்தபோது அது குறித்து அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினோம்.

எனினும், அது சம்பந்தமாக அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவிவகித்த சாகல ரத்நாயக்கவுடன் பேசுமாறு கோரினார் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...