கடமைகளை பொறுப்பேற்றார் வவுனியாவின் புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவின் புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தனது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

கேகாலை - றம்புக்கண பகுதியை சேர்ந்த பி.ஆர்.மானவடு வவுனியாவின் 23ஆவது தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் அவர் தனது கடமைகளை இன்று சுபநேரத்தில் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த இரண்டரை வருடங்கள் கடமையாற்றியிருந்தார்.

மேலும், வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசன்னவெலிகள கடந்த மாதம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers