கிளிநொச்சியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் வர்த்தகரின் உண்ணாவிரத போராட்டம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரை இன்றைய தினம் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் ஆதன வரி அறவீட்டை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரொருவர் மூன்றாவது நாளாகவும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

வரியை குறைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபடும் குறித்த வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அங்கு சென்ற கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வரி அறவீடு தொடர்பில் பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வர்த்தகரான கு.மகேந்திரன் என்பவரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் சென்று பார்வையிட்டுள்ளதோடு, உடல் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே அவரது உடல் வழமை போன்று இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகருக்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - சுமன்

Latest Offers