ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 14ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

Report Print Rusath in சமூகம்

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 14ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் துபியில் இன்று பகல் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் யாழ்.ஊடக அமையம் என்பன இணைந்து “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்”எனும் தொனிப்பொருளில் இந் நினைவு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் மலை அணிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் உட்பட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலையில் வைத்து ஊடகவியலாளரான சு.சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...