கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதியின் இறுதி கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சமாஸ்பிரிவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன.

இதன்போது தோட்ட மக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தந்தையின் குடி பழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து அவர் சண்டை பிடிப்பதாகவும் உருக்கமான கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இவர் கடந்த 23ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவர் எனத் தெரியவருகின்றது.

Latest Offers