தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை சுகாதார பணிமனை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, கொத்மலை நவதிஸ்பனை சுகாதார பணிமனையின் டெங்கு ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து, டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, இராசாயன புகை விசிறல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் டெங்குவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கோடு, இந்தப் புகை விசிறல் மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, கொட்டகலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன் தெரிவித்துள்ளார்.

படங்கள் மற்றும் மேலதிக தகவல் - திருமால்

Latest Offers

loading...