சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! தற்போது ஐரோப்பாவிலும் பரவல்

Report Print Ajith Ajith in சமூகம்

சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனோவைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சீன யுவதி ஒருவர் உட்பட்ட இரண்டு பேர் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இவர்கள் இருவரினதும் இரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு அவை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

ஏற்கனவே சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அங்கு கல்வி கற்ற இலங்கை மாணவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ள நிலையில் மேலும் பல மாணவர்கள் நாடு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த வைரஸ் ஐரோப்பாவுக்கும் பரவியுள்ளதாக பிந்திய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Latest Offers