கொரோனா வைரஸ் தாக்கம்? இலங்கை பெண் ஒருவர் இத்தாலிய வைத்தியசாலையில் அனுமதிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கடும் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பெண் ஒருவர் இத்தாலியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டது.

63 வயதான இலங்கை பெண்ணே கொட்டுங்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இத்தாலியின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தப் பெண் கடந்த செவ்வாய்கிழமையே இலங்கையில் இருந்து இத்தாலிக்கு திரும்பியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த பெண் சீனாவின் கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பரிசோதனையின் பின்னர் உண்மை தகவல் வெளியிடப்படும் என்று இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவின் வைரஸ் காரணமாக ஐரோப்பா மற்றும் இந்தியா உட்பட்ட பல நாடுகளிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Latest Offers

loading...