ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 14 வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

Report Print Navoj in சமூகம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் யாழ். ஊடக அமையம் என்பன இணைந்து “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்” என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மாநாகரசபை உறுப்பினர் இராஜேந்திரன், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர், இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் உட்பட அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரையாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers