உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்! ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பூஜித்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று சாட்சியம் அளித்தார்.

அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய சாட்சியப்பதிவு சுமார் 7 மணித்தியாலங்களாக இடம்பெற்றது.

இதற்காக அவர் இன்று முற்பகல் 10 மணியளவில் சிறையதிகாரிகளின் பாதுகாப்புடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து வரப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், பூஜித் ஜெயசுந்தரவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அடுத்த நீதிமன்ற விசாரணை பெப்ரவரி 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று கூறிவருகின்றனர்.

தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அதனை தெரியப்படுத்தியதாக பூஜித் ஜெயசுந்தரவும் ஹேமசிறி பெர்ணான்டோவும் கூறிவருகின்றனர்.

Latest Offers

loading...