வெளிநாடு ஒன்றில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இலங்கையரை தேடும் பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

சைப்ரஸ் நாட்டில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பிரசாத் சந்தன வீரதுங்க என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.

சந்தேக நபர் பணியாற்றிய பகுதியில் சக பெண் ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த இலங்கையர் அந்த பகுதியில் சாரதியாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து குறித்த இலங்கையர் காணாமல் போயுள்ளதாகவும் அவரது கையடக்க தொலைபேசி செயலிழந்து போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இலங்கையர் தொடர்பில் தகவல் அறிந்தால் 112 என்ற இலக்கதிற்கு அறிவிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.