தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் பெயரில் காரைதீவு தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் பெயரில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தொலைபேசிவாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இனவாத ரீதியில் கடும் சொற்களில் உரையாடியதோடு சஹ்ரானின் கட்டளைப்படி தன்னை கொலை செய்யவிருப்பதாகவும் குறித்த நபர் கூறியதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த நபர் மாவடிப்பள்ளியிலிருந்தே தன்னை தொடர்பு கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.