ஓட்டமாவடியில் அனுமதிப்பத்திரமின்றி மர தளபாடங்களை ஏற்றிச்சென்ற சந்தேகநபர்கள் கைது

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மர தளபாடங்களை ஏற்றி சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இந்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பகுதியிலிருந்து வரக்காப்பொல பிரதேசத்திற்கு மர தளபாடங்களை ஏற்றி சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி கொண்டு வரப்பட்ட முதிரை கட்டில்கள் இரண்டும், முதிரை அலுமாரியொன்றும், மரத்தளபாடங்களை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.