சட்டவிரோத மது விற்பனையால் பறி போகும் அப்பாவி உயிர்கள்! கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

சட்டவிரோத மது விற்பனை மற்றும் பாவனையால் பறி போகும் அப்பாவி உயிர்கள் எனும் தொனிப்பொருளில் கொட்டகலையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மலையக இளைஞர், யுவதிகளின் ஏற்பாட்டில் கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்பாக ஆரம்பித்து கொட்டகலை பிரதேச சபை வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தந்தையின் குடி பழக்கம் காரணமாக மனம் உடைந்த மகள் உருக்கமான கடிதமொன்றினை எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கடந்த 23ஆம் திகதி பதிவாகியிருந்தது.

குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே உயிரிழந்த யுவதியின் நண்பர்கள், மலையக முகநூல் நலன் விரும்பிகள் மற்றும் சமூக மறுமலர்ச்சி எண்ணம் கொண்டவர்கள் கண்டன பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்களால் சட்டவிரோத மதுவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்படி பத்தனை பொலிஸ் நிலையம், கொட்டகலை பிரதேசசபை, மனித உரிமைகள் ஆணைக்குவிற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers