ஏ9 வீதியில் இரவில் திடீர் இராணுவ சோதனை சாவடிகள்!

Report Print Dias Dias in சமூகம்

A9 வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் இன்றிரவு இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 வீதியின் புளியங்குளம், நொச்சிமோட்டை சந்தி, ஓமந்தை மற்றும் ஈரியற்பெரியகுளம் ஆகிய குறுகிய இடைவெளிகளில் நான்கு இடங்களில் இராணுவத்தினரால் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பேரூந்துகளில் பயணித்த அனைத்து பயணிகளும் தங்களின் பயணப் பொதிகளுடன் பேரூந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள், கடந்த காலங்களில் இடம்பெற்ற கெடுபிடிகளை ஒத்ததாக இருப்பதாகவும், இவ்வாறான திடீர் சோதனைகள் பயணிகள் மத்தியில் ஒருவித பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்” பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.